திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நேற்று முன் தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து நாளை கொடியேற்றத்துடன் 9 நாட்கள் விழா தொடங்குகிறது.
பிரம்மோற்சவ நிகழ்வுகள்:
நவம்பர் 10 – காலை: த்வஜாரோஹணம், இரவு – சிம்ம சேஷ வாகனம்
நவம்பர் 11 – காலை: பெத்த சேஷ வாகனம், இரவு – ஹம்ச வாகனம்
நவம்பர் 12 – காலை முத்தையாபு பண்டிரி வாகனம், இரவு – சிம்ம வாகனம்
நவம்பர் 13 – காலை : கல்ப விருட்ச வாகனம், இரவு – ஹனுமந்த வாகனம்
நவம்பர் 14 – காலை: பல்லகி உற்சவம், இரவு – கஜ வாகனம்
நவம்பர் 15 – காலை: சர்வ பூபால வாகனம், இரவு – கருட வாகனம்
நவம்பர் 16 – காலை: சூர்யபிரபை, இரவு: சந்திரபிரபை
நபம்பர் 17 – காலை: தேரோட்டம், இரவு: அஸ்வ வாகனம்
நவம்பர் 18 – காலை: பஞ்சமி தீர்த்தம், இரவு: த்வஜாரோஹனம்