ராகு கேது பெயர்ச்சி: கரூரில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி

புதன், 13 பிப்ரவரி 2019 (15:29 IST)
ராகு கேது பெயர்ச்சியினை முன்னிட்டு, கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரஹங்களில் சுப, அசுப பலன்களை தரும் ராகு, கேது விற்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.



ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 இன்றைய தினம் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது.

இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

இந்த ராகு கேது பெயர்ச்சியினை முன்னிட்டு., கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், வீற்றிருக்கும் நவக்கிரஹங்களில் ராகு மற்றும் கேது விற்கு சிறப்பு தீபாராதனை, கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, ஷோடசசம்ஹார நிகழ்ச்சியினை தொடர்ந்து ஒதுவார் பக்தி பாடல்களை பாடியும், நாதஸ்வரம் இன்னிசை நிகழ்ச்சிக்கு பின்னர் மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலனை பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், கோயில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.


சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்