அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சி லட்சார்ச்சனை நிகழ்ச்சி

செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (13:42 IST)
வரும் 13ம் தேதி ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது.  நாளை (புதன்கிழமை) பகல் 2 மணியளவில் ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு கேதுபகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு கேது பெயர்ச்சியால் நவகிரகங்களில் ராகு கேது பெயர்ச்சி வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சி காரணமாக அவருடைய கெடுதல் நடைபெறும் என்றும் நல்லது நடைபெறும் என்றும் பல்வேறு சிந்தனைகள் வந்து கொண்டிருக்கிறது.இறைவனை வேண்டினால் இவ்வுலகத்தில் நம்மை யாரும் எந்த தீய சக்திகளும் பக்தர்களை தீண்ட முடியாது என்பதற்காகவே அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் லட்சார்ச்சனையும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இந்த லட்சார்ச்சனை விழா ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இவ்வுலகத்தில் அருள்பாலித்து வரும் ராகு மற்றும் கேது சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கொங்கு ஏழு தலங்களில் முதல் தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. கோவில் காளை விநாயகர் வழிபாடு நவகிரக அபிஷேகம் மகா சங்கல்பம் லட்சார்ச்சனை அபிஷேகம் மற்றும் லட்சம் 20 நபர்களுக்கு அபிஷேகமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக லட்சார்ச்சனை அபிஷேகமும் நடைபெறுகிறது.

13ஆம் தேதி பரிகார ராசிக ராசிகளான மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் ராசி உள்ளவர்கள் ஆலயத்திற்குச் சென்று ராகு கேது பகவானை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இன்று தொடங்கிய இந்த லட்சார்ச்சனை தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் மூன்றாவது நாளான புதன்கிழமை அன்று காலை ராகு கேதுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர்.

சி.ஆனந்தகுமார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்