அருள் தரும் புரட்டாசி தமிழ் மாத மாத ராசிபலன்கள் 2025! – விருச்சிகம்

Prasanth K

வியாழன், 18 செப்டம்பர் 2025 (10:01 IST)
பெருமாளின் அருள் தரும் மாதமான புரட்டாசி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
29.09.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
08.10.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகள் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

விசாகம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.

அனுசம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்டமாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.

கேட்டை:
இந்த மாதம் மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.

பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக் 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்:      செப் 24, 25, 26

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்