1 லட்சம் வடைமாலை ஏற்க தயாராகும் நாமக்கல் ஆஞ்சநேயர் ...
வியாழன், 3 ஜனவரி 2019 (17:54 IST)
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டும் வருகிற 5 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா நடைபெறவுள்ளது.
ஜெயந்தி விழாவுக்காக அன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி அருகிலுள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் துரிதமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகின்றன.