சுமார் ரூ.100 கோடி திட்ட மதிப்பில் 87 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சேலம் - கரூர் வழி நாமக்கல் மின் மயமாக்கப்பட்ட ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் கோட்ட ரயில்வே தலைமை துணை பொறியாளர் ஜான்சன், கோட்டப் பொறியாளர் (எலக்ட்ரிக் ) ஆகியோர் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் கடந்த 19 ஆம் தேதி சோதனை ஓட்டம் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரடி ஆய்விற்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.