இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார். இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதற்குப் பின்புலமாக உள்ளன. கார்போரேட் மூலதனமும் வகுப்புவாத சக்திகளும் அமைத்துள்ள இந்தக் கூட்டணி, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள் மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்து கொள்கிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஆதிக்க சாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக்கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. மதச் சார்பின்மையை முன் வைத்து உருவான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் இரு கட்சிகள் மோடியை முன் நிறுத்துவதில் துணை போகின்றன.
இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத் தடுப்பதற்கான எல்லவிதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு, நமது மதச் சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்புக்களையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பா.ஜ.கவால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் – மதவாத – சாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழக வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பர்ற, ஜனநாயக சக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம்.
அடுத்த பக்கம்..
“Never before in post-independence India have witnessed political forces, which are a front for an organisation committed to create a Hindu Rashtra, strong bid for power in the coming elections. These forces are led by a person who presided over a pogrom against Muslims in Gujarat in 2002 and has never accepted his role in that ghastly incident. And they continue to get support and the backing from the most powerful corporate houses in the country. The prospect of this alliance of corporate capital and communal forces coming to power constitutes a palpable threat to the future of our secular democracy.
“Writers, artists and intellectuals all over India are deeply concerned with this danger and are appealing to the electorate to take note of this danger. We, the Tamil writers and artists are also joining our hands with them.
” We are more concerned about the situation in Tamilnadu as the casteist forces have joined hands with these communalist forces. Two other parties which claim the secular legacy of the Dravidian parties are also in that coalition.
“We urge all responsible individuals and political formations to ponder over the situation andurgently take necessary steps to defend our secular democracy. We appeal to the electorate to foil this corporate-communal alliance’s bid for power by voting against the BJP-led NDA.”
(In total 224 writers and artistes have signed below)
கி.இராஜநாராயணன், மூத்த எழுத்தாளர், புதுவை,
பிரபஞ்சன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர், சென்னை,
இந்திரா பார்த்தசாரதி, மூத்த தமிழ் எழுத்தாளர். டெல்லி,
முனைவர் தொ.பரமசிவன், எழுத்தாளர்/ வரலாற்றறிஞர், திருநெல்வேலி,
கவிக்கோ அப்துல் ரஹ்மான், மூத்த தமிழ்க் கவிஞர், சென்னை,