முப்படை தலைமை தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து: மாரிதாஸ் கைது
வியாழன், 9 டிசம்பர் 2021 (17:51 IST)
முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூட்யூபரான மாரிதாஸ் முன்னதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சில முறை கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த புகாரில் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படை, மத்திய அரசின் கருத்துகளுக்கு எதிரான கருத்தை மாரிதாஸ் பதிவிட்டுள்ளார் என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து மாரிதாஸ் தனது கருத்தை சமூக வலைதளத்தில் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளது.