நடந்து சென்ற இளைஞர் அறிவிப்பு பலகை மீது மோதி உயிரிழப்பு.

செவ்வாய், 28 ஜூன் 2022 (19:08 IST)
நடந்து சென்ற இளைஞர் அறிவிப்பு பலகை மீது மோதி உயிரிழப்பு.
சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் அறிவிப்பு பலகை மீது எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சந்துரு என்ற இளைஞர் மது போதையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அறிவிப்பு பலகை மோதியதால் தலையில் பலத்த காயம் அடைந்து அதன் பிறகு அவர் தள்ளாடி வழியே சாலையில் கீழே விழுந்து உயிரிழந்தார்
 
 இந்த நிலையில் அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்