அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய நிபந்தனை: மத்திய அரசு அறிவிப்பு!

செவ்வாய், 28 ஜூன் 2022 (14:30 IST)
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு மத்திய அரசு முக்கிய நிபந்தனை விதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் யாத்திரை செல்ல ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ள நிலையில் நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை வரும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது பயோமெட்ரிக் சரிபார்க்கப்பட்ட அட்டையை கண்டிப்பாக எடுத்துக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
 
இந்த பயணம் செய்யும் பக்தர்களுக்கு தினமும் லான்சர் எனப்படும் உணவுகள் வழங்கப்படுகிறது என்றும் உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்