கரூர் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சின்னமநாயக்கம்பட்டி சேர்ந்தவர் சுதாகர் 21 இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் மெக்கானிக்கல் வேலை பார்த்து வருகிறார் இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து சினவை நண்பர்கள் குழு என்ற ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைந்து உள்ளனர். சம்பவத்தன்று இவரது சினவை வாட்ஸ் ஆப் குழுவில் சுதாகர் புகைபடத்தை வைத்து நாளை முழு ஊரடங்கு சின்னமநாயக்கம்பட்டி ஆட்சியர் சுதாகர் அதிரடி உத்தரவு என்கின்ற ஒரு வீடியோ பதிவு தொலைக்காட்சியில் வருவதுபோல் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சுதாகர் மாயனூர் போலீசில் புகார் செய்தார். புகாரை விசாரித்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கரூர் டெலிவரி மேனாக வேலை பார்த்துவந்த லோகேஷ் வயது 21 என்று தெரியவந்தது உடனடியாக மாயனூர் போலீசார் லோகேஷ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.