லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பட்டாகத்தியுடன் கூடிய வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை கூறினார்கள்.