விருதுநகரில் நடைப்பெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், நான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஏனென்று கேட்டால், என்னை விட, என்னால் ஒரு நல்ல முதலமைச்சரை உருவாக்க முடியும் என்று கூறினார்.
நான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஏனென்று கேட்டால், என்னை விட, என்னால் ஒரு நல்ல முதலமைச்சரை உருவாக்க முடியும். இளைஞர்களை அரசியலுக்கு வாருங்கள்.. வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோமே, அவர்களில் இருந்து ஒருவர் முதலமைச்சரானால் பெருமைப்படுவோம், என்றார்.
சமக தலைவர் சரத்குமார் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக முதல்வரையும் பாராட்டியுள்ளார், மாணவர்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து உள்ளது என்றும் கூறியுள்ளார். தான் முதலமைச்சராக வேண்டும் என்று குறிப்பிட்ட சரத்குமார், இளைஞர்களில் ஒருவரை நல்ல முதலமைச்சராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.