இளம் பெரியார் உதயநிதி - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (12:25 IST)
சென்னையில் சமீபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது பேச்சு அரசியலில் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில்,  பாஜக உள்ளிட்ட கட்சிகள்  உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில் சனாதனம் பற்றி பேசி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக உதயநிதி மீது  பிகார் மாநிலம் முசாபர்பூர்  நீதிமன்றத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் உதயநிதி, சனாதனம் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என டெல்லி பாஜக கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து நேற்று, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார், ‘உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக' அறிவித்திருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்   தலைவர்  கே.எஸ். அழகிரி,  உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி,  ‘’100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னதைத்தான் உதயநிதி சொல்லியிருக்கிறார்… அதில் எந்தத் தவறுமில்லை… உதயநிதியை இளம் பெரியார் என்று சொல்லாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்