இவர் நித்திரவிளை பூந்தோப்பு காலணியி வசிக்கும் வாலிபர் பிஜீ காஸ்ரோ ஒரு தலையாக காதலித்துள்ளார். அவர் அனுகென்சியை பலமுறை வற்புறுத்தியும் அவரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை எனத்தெரிகிறது. அவரது தொல்லை அதிகரிக்கவே, 6 மாதங்களுக்கு முன்பு அனுகென்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், புது வருடத்தையொட்டி நேற்று இரவு நள்ளிரவு பிரார்த்தனைக்காக அன்கென்சி தேவாலயத்திற்கு சென்றார். அங்கிருந்து வெளியே வரும் போது, காத்திருந்த பிஜீ மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அனுகென்சி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.