உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Prasanth Karthick

செவ்வாய், 28 மே 2024 (20:45 IST)
இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் அன்னதானம் செய்துள்ளனர்.



உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் பலர் தினசரி ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலை இன்னமும் இருந்து கொண்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் பட்டினியால் வாடுவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கோடு ஆண்டுதோறும் மே 28ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.\

அவ்வாறாக இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பசியால் வாடும் மக்கள் பசியாறும் வகையில் அன்னதானம் நடத்துமாறு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விதவிதமான உணவுகளை சமைத்து மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் விருந்து வைத்தனர்.

அந்த வகையில் திருவான்மியூர் மருதீஸ்வரர் கோவில் வடக்கு மாத வீதியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் மதிய உணவு சேவையில் த.வே.க பொதுச்செயளாலர் புஸ்ஸி ஆனந்த் மக்களுக்கு உணவு பரிமாறினார். மேலும் பல இடங்களில் த.வே.க தொண்டர்கள் மதிய உணவு விருந்து அளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்