இந்த நிலையில், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் 1051 மகளிருக்கு, இத்திட்டத்துக்கான பிரத்யேக டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தன் சமூக வலைதள பக்கத்தில்,
''தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்” கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 1051 மகளிருக்கு, இத்திட்டத்துக்கான பிரத்யேக டெபிட் கார்டுகளை வழங்கினோம்.
மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம், மகளிருக்கு கல்வி உரிமை - சொத்துரிமை தந்த தி.மு.கழகம், இன்றைக்கு மகளிரின் பொருளாதார உரிமையையும் நிலைநாட்டியுள்ளது என்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் மத்தியில் உரையாற்றினோம்.