பெண்கள் போராடுவது பேஷனாகிவிட்டது: முதல்வர் எடப்பாடியின் அநாகரிக பேச்சு!

சனி, 8 ஜூலை 2017 (12:34 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் பெண்கள் போராட்டம் நடத்துவது பேஷனாகிவிட்டது என கூறியுள்ளார். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 
 
தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை. இந்த போராட்டங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து நடத்துவது பேஷனாகி விட்டது என குற்றம் சாட்டினார்.
 
ஒரு மாநிலத்தின் முதல்வர் என்னும் கன்னியமிக்க பொறுப்பில் இருந்து கொண்டு பெண்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி பேசியது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
வீட்டில் இருக்கும் பெண்களை வீதிக்கு வர வைத்து போராட வைத்தது இந்த ஆட்சியின் அவலம். ஆனால் அவர்கள் போராடுவதை பேஷன் என முதல்வர் விமர்சிப்பதாக அவரை சமூக வலைதளத்தில் விமர்சிக்கின்றனர்.
 
ஒரு பெண்ணை முன்னிறுத்தி அரசியல் செய்த கட்சியில் உள்ளவர், அவரது தலைவி ஜெயலலிதா நடத்திய போராட்டங்களும் பேஷனுக்காக நடத்திய போராட்டங்கள் தானா என சரசரமாரியாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்