நாமக்கல் பேருந்துநிலையம் அருகே தள்ளுவண்டிக் கடை வைத்து நடத்தி வந்தவர் திருமங்கை. அவரது கடையில் தினசரி சாப்பிட வந்துகொண்டிருந்த தனபால் என்பவரைக் காதலித்து வந்துள்ளனர். ஆனால் சில மாதங்களுக்கு முன் கடையை மூடிவிட்டு திருமங்கை வேறு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ரமேஷ் என்பவரை சந்தித்து அவரோடு காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துள்ளார்.
இதையறிந்த தனபால் அவர்மேல் ஆத்திரம் கொண்டு அவரைப் பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அதனால் அவரை ஒரே ஒரு முறை தனிமையில் சந்திக்கவேண்டும் என நைச்சியமாக பேசி வரவழைத்துள்ளார். இதையடுத்து இருவரும்மூலனூர் அமராவதி ஆற்றங்கரை அருகே சந்தித்துள்ளனர். அப்போது திருமங்கையை கொலை செய்து அவரது சடலத்தை முட்புதரில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தனபால் தலைமறைவாகியுள்ளார்.