ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஜூனியர் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக ஹரிணி என்னும் பெண் வேலை பார்த்து வந்தார். இவரை சமீபத்தில் அழைத்த அவருடைய மேலாளர் இந்த மாதத்துடன் உனது வேலை பறிக்கப்படுவதாகவும், வேறு நிறுவனத்தில் நீ வேலை தேடிக்கொள் என்று கூறியதாகவும் தெரிகிறது
இதனையடுத்து மனமுடைந்த ஹரினி, தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து யாரிடமும் பேசாமல் சாப்பிட்டால் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த மாதம் 30ஆம் தேதியுடன் வேலை போய்விடும் என்றும், இன்னும் பத்து நாள் மட்டுமே வேலை இருக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்த ஹரிணி, ஒரு கட்டத்தில் மனம் உடைந்து தூக்கில் தொங்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது