அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
மேலும், பல இடங்களில் பெண்கள் பால் குடங்களை எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக செல்வது அதிகரித்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் நெய்காரப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில், ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சில பெண்கள் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், உத்தமசோழபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் மரணமடைந்தார்.