ஓபிஎஸ் அணியில் சேர இருக்கிறாரா வளர்மதி: நடந்தது என்ன?
திங்கள், 17 ஏப்ரல் 2017 (14:09 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி சசிகலா அணியில் இருந்து விலகி ஓபிஎஸ் அணியில் சேர இருப்பதாக செய்திகள் பரவியது. ஆனால் இதனை செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த தகவலில் வளர்மதி மறுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாவுடனே வலம் வந்தார் வளர்மதி. ஓபிஎஸ் அணியில் பலரும் சென்ற போதும் வளர்மதி சசிகலா, தினகரன் அணியுடனே இருந்தார். ஊடகங்களில் ஓபிஎஸ் அணியை விளாசினார்.
இதற்கு விசுவாசமாக சசிகலா அவருக்கு தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனர் பதவியை வழங்கினார். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலின் போது வளர்மதி மீது மாநிலப் பேச்சாளர்கள் பயண விவரத்தில் அதிகமாக மூக்கை நுழைத்தாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வளர்மதியிடம் தினகரன் விசாரணை நடத்தியதாக கிசுகிசுக்கப்பட்டது.
இதனையடுத்து கட்சியின் மூத்த உறுப்பினரான தன்னிடமே விசாரணை நடத்தியதால் ஓபிஎஸ் அணியிடம் வளர்மதி செல்ல இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இதனை வளர்மதி முற்றிலுமாக மறுத்துள்ளார்.
தமிழ் செய்தி இணையதளம் ஒன்றுக்கு இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், நான் ஓபிஎஸ் அணிக்கு போகிறேன் என எந்த பேடியோ, அறிக்கையோ அளிக்கவில்லை. பின்னர் எதன் அடிப்படையில் இப்படி ஒரு தகவல் வெளியாகிறது என்பது தெரியவில்லை.
வேண்டுமென்றே என்னை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி சதி செய்கின்றனர். என்னை கோபப்படுத்த யாரோ எனக்கெதிராக சதி செய்கிறார்கள். அவர்களை நினைத்தால் எனக்கு கோபமாக வருகிறது என கூறியுள்ளார்.