பச்சமுத்துவிற்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று நீதிமன்ற விசாரணை

வியாழன், 8 செப்டம்பர் 2016 (00:23 IST)
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பில் இடம் வாங்கித் தருவதாக, வேந்தர் மூவிஸ் நிர்வாகி மதன் மோசடி செய்து விட்டதாக காவல் துறையில் பலர் புகார் செய்தனர்.
 

 
இந்த மோசடி குறித்து பதிவான வழக்கில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர், பச்சமுத்துவை காவல்துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர்.
 
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், பச்சமுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இதையடுத்து சென்னை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு பச்சமுத்து சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு காவல்துறையினரின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து நீதிபதிகள் விசாரணையை வருகிற 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், காவல்துறையின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து இன்று பச்சமுத்து ஜாமீன் மனு இன்றைக்கு விசாரணை வருகிறது. இதனால், பச்சமுத்துவிற்கு ஜாமின் கிடைக்குமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்