இந்நிலையில் சமீபத்தில் கைலாசாவிற்கு ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா திறக்கபோவதாக அறிவித்தது கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை (Kailashian Dollars) நித்யானந்தா அறிமுகப்படுத்தினார். இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் புதிதாக கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது கொரோனாவால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதால் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என கோரியுள்ளனர்.