கோவை பன்னிமடை சஞ்சீவ் நகரை சேர்ந்த டிரைவர் கணேசன், என்பவரை ஒரு காட்டுயானை அடித்து கொன்றது. இதையடுத்து நேற்று இரவு தொப்பம்பட்டி என்னும் பகுதியில் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு கல்லூரி வழியாக இறங்கியுள்ளது காட்டு யானை. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்திக் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை நோக்கி காட்டு யானை ஓடி வந்தது. இதை பார்த்த இருவரும் ஓட்டம் பிடித்தனர்.