மதுரை செல்லூரைச் சேர்ந்த மகேந்திரன், கலைச்செலவி ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகி 4 வருடங்களே ஆன நிலையில், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கலைச்செல்வி தன் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.
காவல் துறையில் மீண்டும் அவரது மனைவி தன்மீது புகார் செய்ததை அறிந்த மகேந்திரன் பாலம் ஸ்டேசன் சாலையில் சென்றுகொண்டிருந்த கலைச்செல்வியிடம், தகராறில் ஈடுபட்டு, வாக்குவாதம் பெரிதாக மகேந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலைச்செல்வியின் வயிற்றில் குத்தியுள்ளார்.
காயம் அடைந்த கலைச்செல்வி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக முத்துச்செல்வி அளித்தப் புகாரின்பேரில், செல்லூர் காவல் துறையினர் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.