கடந்த சில மாதங்களாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வது அரசியல்வாதிகளுக்கு ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. முதன்முதலில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று செய்த அரை மணி நேர தியானம் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. அன்றுமட்டும் அவர் ஜெ. சமாதிக்கு செல்லவில்லை என்றால் மறுநாள் சசிகலா முதல்வராக பதவியேற்றிருப்பார்
இந்நிலையில் அதிமுகவை பல ஆண்டுகாலம் எதிர்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீரென எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக வட்டாரங்கள் கூறியபோது, '''அ.தி.மு.க-வை ஆரம்பித்த எம்.ஜி.ஆருக்கு, இது நூற்றாண்டு விழா. அந்தக் கட்சியால் வளர்ந்தவர்களும், வாழ்ந்தவர்களும் இந்த விழாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இன்று, அந்தக் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் சுயநலத்துக்காகவே பாடுபடுகின்றனர். இதனால்தான் எம்.ஜி.ஆரைப் போற்றும்வகையில், அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அதற்கான விழாவைக் கொண்டாடியிருக்கிறார் வைகோ'' என்கின்றனர்.