திமுக ஐடி விங் பணியை ராஜினாமா செய்தது ஏன்: பிடிஆர் விளக்கம்

வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:18 IST)
திமுக ஐடி விங் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அந்த பதவியை இராஜினாமா செய்தார் என்பதையும் அதற்கு பதிலாக டிஆர்பி ராஜா அவர்கள் நியமனம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் திமுக ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் அந்த விளக்கத்தில் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பொறுப்புடன் ஐடி விங் பொறுப்பையும் கவனிக்க கடினமாக இருந்ததால் ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் திமுக ஐடி விங் பணியை முழு அர்பணிப்புடன் பணியாற்ற முடியாமல் பெருமைக்காக அந்த பதவியில் ஒட்டிக் கொண்டு இருப்பது எனது இயல்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் இளைஞரான டிஆர்பி ராஜா தலைமையில் திமுகவின் சுறுசுறுப்பாக செயல்படுவதாகவும் திமுக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்