தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினி, அஜித், விஜய் என அனைவரும் காலியிலேயே வந்து வாக்களித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலையில் முதல் ஆளாக வந்து வக்களித்தார். ரஜினிகாந்த் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாமல் இருப்பதற்காக, வாக்களிக்கும் போது, ஊடகங்கள் யாரும் அவரை நெருக்காதபடி பார்த்துக்கொள்ளப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்திடம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர் அதை என்னால் சொல்ல முடியாது என பதிலளித்தார். பின்னர் உடனடியாக காரில் புறப்பட்டார். கடந்த தேர்தலில், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என ரஜினி பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.