மேலிடத்தில் அழைப்பு... டெல்லி பறந்த நயினார்; பதவியோடு வருவாரா?

புதன், 4 டிசம்பர் 2019 (11:38 IST)
மேலிடத்தின் அழைப்பின் பெயரில் டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைவர் பதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றதால் தற்போது பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
 
தமிழக பாஜக தலைவருக்கான பரிசீலனை பட்டியலில் வனாதி ஸ்ரீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர் உள்ளது. தற்போது மத்தியில் பாஜக வலிமையான ஆட்சியை அமைத்துக் கொண்டு விட்டாலும், தமிழகத்தில் இன்னும் சரியான வளர்ச்சியை எட்ட முடியவில்லை. எனவே தமிழக பாஜக தலைவராக பக்காவான ஆளை நியமிக்க தலைமை காத்துக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் மேலிடத்தில் இருந்து வந்த அழைப்பால் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். இதனால் அவருக்கு பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக் பேச்சு எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்