மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ. 6.71 லட்சம் கோடி கடன் ! திணறும் அரசு !

செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:09 IST)
மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான  சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மாராட்டிய தேசத்தை ஆண்ட பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அரசும்,ரூ.6.71 லட்சம் கோடி கடன் வைத்து விட்டுச் சென்றுள்ளதாக மகாராஷ்டிர முன்னணி அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ரால்ட்,  தற்போது மாநிலத்தில் கடன் சுமை இருந்தாலும், அரசு விவசாயிகளுக்கு கொடுத்துள்ள உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவேற்றும்.
 
மேலும், தற்போது காலம்தவறி பெய்யும், வடகிழக்கு பருவமழையால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ரூ.25000 வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்