கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் சார்ந்த மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வாகன விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை 10,000 ரூபாயிலிருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
சமூக அக்கறை கொண்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட அவர்களின் செல்போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிமன்றம் தடாலடியாக கேள்வி எழுப்பியது.