பொங்கல் பண்டிகை.. சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு! அணிவகுத்து நின்ற வாகனங்கள்.!!

Senthil Velan

சனி, 13 ஜனவரி 2024 (10:52 IST)
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருவதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
பொங்கல் பண்டிகை வருகிற 15 ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழகத்தில் தற்போது கலை கட்டி உள்ளது. பள்ளி கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு, 3 நாட்கள் பொங்கல் விடுமுறை எனத் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் முதல் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என கார்கள் வரிசையாக அணிவகுத்து  நின்றதால் போக்குவரத்து நெரிசல் சிக்கி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி அடைந்தனர்.
 
சென்னை போரூர், ஆற்காடு சாலை, சர்வீஸ் சாலை, முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. நசரத்பேட்டை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம், திருமழிசை உள்ளிட்ட இடங்களில் 2 கிலோமீட்டர் அளவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
 
மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட இடங்களில் 5 சிப்காட்டுகள் உள்ளன. இங்கு பணிபுரிவோரும் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 
 
சென்னை, வேலூர் பகுதிகளில் இருபுறமும் வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அது போல் அத்திப்பள்ளி சுங்கச் சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து இன்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்