முந்தைய தேர்தலின் முதல்வர் வேட்பாளர்கள் மாயமான அதிசயம்

புதன், 13 மார்ச் 2019 (21:30 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி, விஜயகாந்த், சீமான் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வெற்றி பெற்றதால் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
 
ஆனால் தோல்வி அடைந்த முதல்வர் வேட்பாளர்களான அன்புமணியும், விஜயகாந்தும் அதிமுகவிடம் சரண் அடைந்து முதல்வர் கனவையே மறந்துவிட்டனர். அதேபோல் தனிக்கூட்டணி அமைத்து போணியாகாத வைகோவும், திருமாவளவனும் திமுகவை நாடி சென்றுவிட்டதால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக, திமுக ஆகிய இரு அணிகள் மட்டுமே பிரதான அணியாக உள்ளது.
 
இருப்பினும் புதிய தலைவர்களாக டிடிவி தினகரனும், கமல்ஹாசனும் தோன்றியுள்ளனர். இவர்கள் இருவரும் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு உள்ளது. இவர்களுடன் ரஜினியும் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் மீண்டும் முதல்வர் வேட்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் டிடிவி தினகரன் என ஐந்துமுனை போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது 
 
அப்போதும் அன்புமணி, விஜயகாந்த், வைகோ, திருமாவளவன் ஏதாவது ஒரு கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. சீமான் வழக்கம்போல் தனித்து நின்று தேர்தல் ஆணையத்திற்கு 234 தொகுதிகளின் டெபாசிட் தொகையை வருமானமாக அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்