இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்தராஜ், ‘’சட்டமன்றக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் ஏன் இத்தனை அவசரம் என்று தெரியவில்லை. நடக்கின்ற ஆட்சியே நன்றாகத்தானே ஜனநாயக முறைப்படி போய்க்கொண்டிருந்தது.
தெருத்தெருவாக சென்று வெயிலில் அலைந்து வாக்குசேகரித்தவன் நான். அதனால், எனக்கு இது குறித்து பேச உரிமை இருக்கிறது. முதலமைச்சர் என்கிற பொறுப்பு மக்கள் தருகிற பொறுப்பு. தயவுகூர்ந்து அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.