அரக்கோணம் திமுகவில் என்ன நடக்குது? ஜெகத்ரட்சகனை சீண்டும் காந்தி!

புதன், 28 பிப்ரவரி 2024 (09:37 IST)
தமிழகத்திலுள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக தலைமையின் உத்தரவின் பேரில் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” எனும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.



அரக்கோணம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் அந்த தொகுதியின் தற்போதைய MPயும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான திரு.ஜெகத்ரட்சகன் பெயரை அழைப்பிதழில் குறிப்பிடப்படவில்லை .

அதுமட்டும் இல்லாமல் முறையான அழைப்பும் விடுக்காத இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்தியின் செயல் திமுகவினர் மட்டும் இல்லாமல் பலரின் புருவங்களை உயர்த்த செய்துள்ளது.

மேலும் விசாரிக்கையில் காந்தி தன் மகனுக்கு MP சீட் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு ஜெகத்ரட்சகனின் பெயரை ஆழைப்பிதழில் சேர்க்காமல் விட்டதாகவும் இதை மோப்பம் பிடித்த ஜெகத் தன் நெருங்கிய வட்டாரத்தில் மன குமுறலை வெளிப்படுத்தியாக தெரிகிறது.

கட்சி தலைமைக்கு மிக நெருங்கிய ஜெகத்திற்க்கே இந்த அநீதி என்றால் அந்த மாவட்ட திமுகவினர் நிலைமையோ படுமோசம்.

கடந்த முறை நடந்த திமுக உட்கட்சித் தேர்தலில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் ஜெகத்ரட்சகனுடன் நெருக்கமாய் இருந்த பல ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காந்தியால் ஓரங்கட்டப்பட்டனர்.

ராணிப்பேட்டை முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் குட்டி, காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இவ்வளவு வெளிப்படையாக பதவிக்காக மோதிக்கொள்ளும் காந்தியின் மகனுக்கு சீட் தந்தால் வெற்றி வசப்படுமா அல்லது திமுக தலைமை காந்தியை கண்டிக்குமா என தேர்தலில் யாருக்கு சீட் கொடுக்க போகிறார்கள் என்பதின் மூலம் தெரிந்துவிடும்.

கைத்தறி துறையில் ஊழல் :

கைத்தறி துறை என்பதே சிறு நெசவாளர் நலுனுக்காக உருவாகிய துறை. பருத்தி நூலில் நெய்யப்படும் கைத்தறி ஆடைகளே அவர்களின் வாழ்வாதாரம்.

அனால் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தியின் குறுக்கு புத்தியிடன் பவர்லூமில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் பாலிஸ்டர் 80 சதவீதமும் 20 சதவீதம் மட்டும் பருத்தியை பயன்படுத்தி இலவச வெட்டி சேலைகளை கைத்தறியில் நெய்ய சொல்றார் என்று “என் மண் என் மக்கள் நடைபயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக நீண்ட புகாரை கூறியிருந்தார்.

பருத்தி கிலோ ரூபாய் 360 பாலிஸ்டர் கிலோ 160. அப்படினா ஒரு செட் இலவச வெட்டி சேலைல தோரயமா 150 முதல் 180 ரூபா லாபம்.

அப்போ தமிழ்நாடு முழுவதும் 1.6 கோடி இலவச வெட்டி சேலைகள் கொடுத்தா தோராயமாக 200 கோடிக்கு மேல வினோத் காந்திக்கு இந்த விஞ்சான ஊழல்ல லாபம் கிடைச்சிருக்கு.

கிடைத்த லாபத்தில் ராணிப்பேட்டைல ஒரு பிரம்மாண்ட வீடு, வேலூர் முக்கிய புள்ளியிடம் இருந்து 50 கோடிக்கு வாங்கப்பட்ட ஜல்லி கிரஷர் மற்றும் கோயம்புத்தூரில் பல முதலீடுகள் என விரிவாக சவுக்கு சங்கர் ஏற்கனவே கண்டு புடுச்சி பொதுவெளில சொல்லிட்டார்.

இந்த கொள்ளை பத்தாதுன்னு கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு வெட்டி சேலை நெய்ய அரசு ரூ 50 கூலி கொடுக்றதுல 10% கமிஷன் தந்தா தான் கூலியை தருவோம் என வினோத் மிரட்டுவதாக நெசவாளர்கள் குமுறுகின்றனர்.

ஒரு வெட்டி சேலைக்கு 5 ரூபாய் என்றால் 1.60 கோடி வேட்டி சேலைக்கு அந்த கமிஷனே பத்து கோடி தாண்டுது.

தன் தந்தையோட துறைல தலையிடனது மட்டும் இல்லாமல் கட்சி நிர்வாகத்தலையும் தலையிட்டு காந்திக்கு அவப்பெயர் ஏற்படுத்துறார்னு கட்சிக்காரர்களே புலம்புறாங்க.
அமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர் கூட தங்களோட குறைகளை அமைச்சரிடம் சொன்னால் அவர் தரக்குறைவாகவும் ஆபாசமாக திட்டுவதாக பேசிக்கிறாங்க.

தனது சமூகத்தை சேர்ந்த 10 அடிவருடிகள் மூலம் இளந்தலைவர் , அரக்கோணத்தின் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் என தனக்கு தானே தற்புகழ்ச்சி பேனர் போஸ்டர் அடிக்கிறது மட்டும் இல்லாம, அவர் சமூகத்தை சார்ந்தவருக்கே பதவிகள் மற்றும் காண்ட்ராக்ட் பணிகள் கொடுக்கிறார், கட்சி சீனியர்களை மதிக்கவில்லை என பல்வேறு புகார்களில் சிக்கினாலும் தன் தந்தைக்கு நெருக்கமா இருக்க முரசொலி செல்வம் மற்றும் அண்ணா நகர் கார்த்தி மூலம் இந்த முறை அரக்கோணம் பாராளுமன்ற சீட் வாங்கணும்னு முயற்சி பன்றார் வினோத்.

‘சாதனை செம்மலா இல்ல சாராய செம்மலா’ என என் மண் என் மக்கள் பயணத்தில் திரு அண்ணாமலை கேட்ட கேள்வி ராணிப்பேட்டை மாவட்ட மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிகிறது.

ஏற்கனவே தலைமைக்கு நெருக்கமான ஆற்காடு mla ஈஸ்வரப்பன் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று உதயநிதி கிட்ட சொல்லி புலம்புனதாகவும் , அரசு அதிகாரிகள் அனைவரும் வினோத் சொல்வதையேதான் கேக்கணும்னு அடாவடி பண்றதா பேசிக்கிறாங்க. ‘கமிஷன் காந்தி’ என அண்ணாமலை பேசும் அளவிற்கும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுக்கும் அளவிற்கும் செல்ல தன் மகன் செயல்பாடு தான் காரணம் என காந்திக்கு புரிந்தாலும் தன் மகனை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார் என பேசிக்கிறாங்க.

ஏற்கனவே காந்தியை வீட்டை விட்டு வெளியே தள்ளியவர் தான் வினோத். அதனால தான் புறநகர்ல இருக்க கெஸ்ட் ஹவுஸில் இப்போ வசிக்கிறேன் என தனக்கு நெருங்கியவர்களிடம் காந்தி புலம்புவதாக செய்திகள் வட்டமடிக்குது.

இத்தனை குழப்பத்திற்கும் காரணமான வினோத்துக்கு கட்சி சீட் கொடுத்தா ஜெயிக்க வாய்ப்பே இல்லனு திமுகவினரே வெளிப்படையா பேசிக்கொள்கிறார்களாம்.

திமுக தலைமையும் பெரும்பான்மையா இருக்க வன்னிய சமூகத்திற்கே சீட்டு வழங்க முடிவு செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செய்தியாளர் : யாசர்

Updated by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்