மேற்கு தாம்பரம் - மேற்கு தாம்பரம்.. மினி பஸ் இயக்கம் குறித்த அறிவிப்பு..!

Siva

வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (14:17 IST)
வேலைக்கு தாம்பரத்தில் இருந்து மீண்டும் மேற்கு தாம்பரம் வரும் வகையில் மினி பஸ் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதற்காக புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் மினி பேருந்து இயக்கப்படும் புதிய வழித்தடம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி மேற்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் எஸ்55டபிள்யு என்னும் மினி பஸ் பெருங்களத்தூர், எஸ்எஸ்எம் நகர், கேம்ப் ரோடு, கிழக்கு தாம்பரம் வழியாக பயணித்து, மீண்டும் மேற்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த பேருந்து காலை 5.15, 7.40, 10.25, பிற்பகல் 1.10, 3.45, மாலை 6.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும்,

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்