இதற்கு அடுத்து யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கனிசமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 13 இடங்களையும், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் இரு இடத்தையும் அமமுக பெற்றுள்ளது.
அமமுகவிற்கென பொதுச்சின்னம் இல்லாத காரணத்தால், மக்களவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் கடும் சறுக்கலை சந்தித்த பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அவரது அரசியல் சரிவை கண்டுள்ளதாக பெரிதும் பேசப்பட்டது.
அதோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆள் இல்லை, அமமுக கூடாரம் காலியாகிவிட்டது, மக்கள் தினகரனை தூக்கி போட்டுவிட்டார்கள் என தினகரன் மீதும் கட்சி மீதும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், தற்போது தடைகளை மீறி எதிர்பாரத வகையில் வெற்றிகளை அள்ளி வருகிறார் டிடிவி தினகரன். இது அமமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.