யாரையோ காப்பாற்ற ராம்குமாரை சிக்க வச்சுட்டாங்க! தாய்-தந்தை சோகம்
செவ்வாய், 27 ஜூன் 2017 (04:35 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம்குமார் திடீரென மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டதால் பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமலேயே இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராம்குமாரின் தாய், தந்தை இருவரும் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது 'தங்கள் மகனை யாரையோ காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டதாகவும், இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் கூறினர்.
மேலும் ராம்குமாரின் மரணத்தால் அந்த குடும்பமே நிலைகுலைந்துள்ளது. ராம்குமாரின் இரு தங்கைகளும் படிப்படை தொடரமுடியாமல் உள்ளனர். ஒரே ஒரு குடிசை மற்றும் சில ஆடுகள், இதுதான் அந்த குடும்பத்தின் சொத்து என்று ராகுமாரின் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.