உங்களுக்கு வெட்கமே இல்லையா? எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி

ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (09:59 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக தலைவர்கள் வாயை கொடுத்து வாங்கி கட்டி வருகின்றனர். தவளை தன் வாயால் கெடும் என்பது போல் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் 'மெர்சல் படத்தை ஆன்லைனில் பார்த்ததாக கூறினார்.



 
 
இந்த பேட்டி பைரஸியை எதிர்க்க அல்லும் பகலும் போராடி வரும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூடாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
எச்.ராஜா அவர்களுக்கு, மக்கள் அறிந்த தலைவராக இருந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி பைரஸியை ஆதரிக்கின்றீர்கள்? உங்களை போன்ற அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும் எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் இருக்கும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.
 
இது மிகவும் தவறான முன்னுதாரணம், இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு பைரஸியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' 
 
இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்