வைரலான ஆடியோ: அலட்சியமாக பதில் அளித்த மின்வாரிய ஊழியர் பணியிட மாற்றம்!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:47 IST)
தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் இந்த மின்வெட்டு பிரச்சனை மக்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். 
 
இந்நிலையில் குமரி மாவட்டம் களியக்காவிளை மின்வாரிய அலுவலகத்தில் மின்வெட்டு குறித்து கேட்டவருக்கு அலட்சியமாக பதில் அளித்த ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாக மாறியது.  இதனை தொடர்ந்து அந்த மின்வாரிய ஊழியர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்