தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருடைய உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பெற்றிருந்த நடிகையும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான விந்தியா ஜெயலலிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்திய போது விம்மி விம்மி அழுதார்.
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பலனளிக்காமல் மரணமடைந்த ஜெயலலிதாவின் உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மத சம்பிரதாயங்களை முடித்த பின்னர் இன்று காலை அண்ணா சாலையில் உள்ள ராஜாஜி மஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.