விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் பலர், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவி வழிபாடு செய்து கடலில் கரைப்பர். இந்த விழாவிற்கு 2,600 விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்காக 10,000 க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பூஜை முடிந்த பிறகு 5,7,8 ஆகிய நாட்கள் கடலில் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஊர்வலம் செல்லும் வழிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீஸார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.