ரத்ததான முகாம் ஒன்றில் கலந்து கொண்ட விஜயகாந்த், பத்திரிகையாளர்களை சந்தித்தர். அப்போது கேள்வி கேட்ட பட்திரிகையாளர்களை நோக்கி த்தூ என காறி துப்பினார். மேலும் சேலத்தில் பத்திரிகையாளர்களை விஜயகாந்த் தாக்க முயற்சித்தார். இந்த விவகாரங்கள் பலத்த சர்ச்சை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களிலும் அரசியல் அரங்கிலும் இது பெரிதாக விவாதிக்கப்பட்டது. விஜயகாந்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் என சேர்ந்து கிளம்பியது. இந்நிலையில், இந்திய பத்திரிகை கவுன்சில் தாமாக முன்வந்து விஜயகாந்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஜூலை 13-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சில் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.