அப்துல் கலாமின் நினைவு தினம் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், தமிழக மக்களால் மரியாதைக் குரியவராக போற்றப்படுவருமான ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தால் மாணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்ட நாள்.
ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக எளிமை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். தன் சீரிய சிந்தனையோடு அவர் எழுதிய பல புத்தகங்கள் நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
உலக அரங்கில் நம் இந்திய நாடு வல்லரசாக வரவேண்டும் என்பதற்காக அவர் கண்ட கனவு, ஆற்றிய உரைகள், பணிகள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. அம் மாமனிதர் நினைவு நாள், ஒவ்வொரு மாணவரும் நினைவு கூறவேண்டிய பொன்னாள். என கூறியுள்ளார் விஜயகாந்த்.