தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

திங்கள், 23 மே 2016 (15:23 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக படு தோல்வி அடைந்ததற்கான காரணங்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.


 

 
உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். மேலும், மாநில கட்சிகான அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் பறித்தது. முரசு சின்னமும் கை விட்டு போனது. 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. 
 
இதுபற்றி ஆலோசிக்க, சமீபத்தில்தான் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசி வந்தனர்.
 
இந்நிலையில், தேர்தலில் சந்தித்த தோல்வி குறித்து, தனது கட்சி விஜயகாந்த் தனது நிர்வாகிகளுடன் ஆலோசிக்க விரும்பினார். அந்த ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி இன்னும் மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
 
முதல் நாளான இன்று, சில மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். தோல்விக்கான காரணம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விஜயகாந்த் அவர்களோடு ஆலோசனை நடத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்