ஆளுநர் கழட்டி விட்டார்...அமைச்சர் ஏன் கழட்டி விடவில்லை?- வீடியோ பாருங்கள்

சனி, 8 செப்டம்பர் 2018 (15:51 IST)
கரூர் அருகே தமிழக ஆளுனர் குத்துவிளக்கேற்றும் போது அமைச்சர் விஜயபாஸ்கர் காலணியை கலட்டாத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, வளர்ச்சிதிட்ட பணிகளை கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
அந்த வகையில்  கரூருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை)  வருகை தந்த ஆளுனர் பன்வாரிலால் புரோகித்., கரூர் அருகே உள்ள கடவூரில் உள்ள சேவாப்பூர் இன்ப சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டுநிறுவன அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
முன்னதாக நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய கவர்னர் அவரது காலணியை கலட்டி விட்டு, குத்துவிளக்கேற்றினார். ஆனால் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் காலணியை கழட்டி விடவில்லை.
 
இந்த சம்பவம் பா.ஜ.க வினர் மத்தியில் வைரலாகி வருவதோடு, அனைவரையும் சங்கடநிலைக்கு தள்ளப்பட்டதோடு, ஒரு இறைநம்பிக்கையின் மூலமாக தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றுவதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு, ஒரு மாநில கவர்னர் அதுவும் வடமாநிலத்தவர் பன்வாரிவால் புரோகித் காலணியை கலட்டி விட்டு, மரியாதை செலுத்திய போது, ஒரு தமிழகத்தில் பிறந்து ஆன்மீகத்தில் வலம் வரும் அ.தி.மு.க கட்சியை சார்ந்த ஒரு அமைச்சர் அதுவும் ஆளுகின்ற கட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காலணியை கலட்டாத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
-சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்