ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று இரவு ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலில் கட்டிடத்திற்கு சேதங்கள் ஏற்பட்டதோடு, கரும்புகை சூழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலடியாக, உயிரிழந்த ஆறு அமெரிக்க வீரர்களுக்காகவும், தூதரக தாக்குதலுக்காகவும் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் சபதம் எடுத்துள்ளார்.
சவுதி மட்டுமல்லாது குவைத், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. வன்முறை அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு வாஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது.