அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய்தான் ! நடிகர் சிம்புவின் குறை இதுதான் ! - சீமான் அதிரடி

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (14:20 IST)
நாம் தமிழர்  கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் அவ்வப்போது அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளியிடுவார். இந்நிலையில்  ரஜினி சினிமாவில் இருந்து விலகினால் அவர் இடத்திற்கு நடிகர் விஜய்தான் வருவார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் சர்வதேச காணாமல் போனோர்  தினத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 
அவர் கூறியதாவது :

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தனது சம்மதமில்லை.  ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக தெரிவித்தார். நடிகர் விஜய் போன்று நடிகர் சிம்பு ஆடல், பாடல், நடிப்பு, இசை எனப் பல திறமைகள் கொண்டவர்  என சிம்புவை பாராட்டிப் பேசினார். 

மேலும், நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக உச்ச நட்சத்திரமாக அனைத்து தகுதிகளும் சிம்புடம் உள்ளது. ஆனால் சிம்புவிடம் உள்ள ஒரேகுறை அவர் நேரம் தவறுவதுதான். இதை சரிசெய்யும்படி அவரிடம் கூறியுள்ளேன் எனவும் தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்