தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் அப்டேட் வரும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய்யின் பிகில் டீசர் சென்சார் முடிந்துவிட்டதாகவும், படு மாஸாக டீசர் வந்திருப்பதாகவும் பிரபலம் ஒருவர் டுவிட் போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர்.